news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மதுரையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவை

05 Sep, 2024
மதுரையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமான சேவை அதிகரித்துள்ள பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமான சேவையை தொடங்கியுள்ள நிலையில்,இந்த விமான சேவை வரவேற்பை பெற்றுள்ளதால், மதுரையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு ஏழு நாட்களும் விமான சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!