ராஜிவை சந்தித்த முதல் தருணம் வீடியோ வெளியிட்டார் சோனியா
24 Oct, 2026
திருமணம்
சிகிச்சைக்கு பிறகு திருப்பரங்குன்றம் அருகே உள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதனிடையே தனது மகளை காணாமல் செந்திலாவின் பெற்றோர் தேடி வந்திருக்கின்றனர். திருமணமாகி இரண்டு மாதங்கள் கழித்து தனது பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறியிருக்கிறார் செந்திலா.
ஜெயசுதாவை ஆணாக மாற்றி திருமணம் செய்து கொண்டது குறித்து செந்திலா கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவர்களது வீட்டிற்கு வந்து செந்திலாவின் உடமைகளை எடுத்துச் சென்றிருக்கின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செந்திலாவின் பெற்றோர் புகார் அளித்திருக்கின்றனர்.
விசாரணை
இந்த புகாரின் அடிப்படையில் இருவரையும் அழைத்து விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகளிடம் செந்திலா ஆதி சிவனுடன் வாழ விருப்பமில்லை என தெரிவித்திருக்கிறார்.
மேலும் தனது பெற்றோருடன் செல்ல விரும்புவதாக செந்திலா கூறியுள்ளார். இதனையடுத்து தனது பெற்றோருடன் செந்திலா சென்றுவிட்டார்.
காதலுக்காக பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெற்றோரை எதிர்த்து, வீட்டை விட்டு வந்த தனக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறார் ஆதி சிவன்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!