news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன் - மூதூரில் சம்பவம்

09 Feb, 2024
குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கணவன் கொலைசெய்துள்ள சம்பவமொன்று மூதூர் தோப்பூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . தோபூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் . மனைவியின் ஆடையின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த 33 வயதுடைய கணவன் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!