news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மனைவியின் புகைப்படத்தையும் தொலைபேசி இலக்கத்தையும் வெளியிட்டு பாலியலுக்கு அழைக்குமாறு கூறிய கணவன் கைது

06 Jun, 2020
தான் கோரிய சீதனம் கிடைக்காததால், தன் மனைவியின் புகைப்படத்தையும் தொலைபேசி இலக்கத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, அப்பெண்ணுடன் உரையாடுவதற்கு பணம் செலுத்துமாறு சமூக வலைத்தளவாசிகளிடம் கோரிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் தூதியா கிராமத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தனக்கு சீதனமாக மோட்டார் சைக்கிள் ஒன்றைத் தருமாறு இந்நபர் கோரியிருந்தாராம். அக்கோரிக்கை நிறைவேற்றப்படாததால், திருமணத்தின் பின்னர் அவர் மனைவியை தாக்கியும் சித்திரவதைக்குட்படுத்தியும் வந்தார் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.   அந்நபரின் மனைவி சித்திரவதைகள் தாங்க முடியாமல் தன் பெற்றோரின் வீட்டுக்குச் செல்வதற்குத் தீர்மானித்தார். அதன் பின்னர், தன் மனைவியின் புகைப்படத்தையும் தொலைபேசி இலக்கத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, அப்பெண்ணுடன் உரையாறுவதற்கு பணம் செலுத்துமாறு கோரினார். அப்பெண்ணுடன் பாலியல் ரீதியாக உரையாடுமாறும் பாலியல் உறவுக்கு அழைக்குமாறும் அந்நபர் ஆலோசனை வழங்கியிருந்தார். மேற்படி பெண்ணுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்த நிலையில், அவர் இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடுசெய்துள்ளார். அதையடுத்து மேற்படி நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்நபர் விளக்கமறியலில் வைக்ப்பட்டுள்ளதாகவும், இந்நபருக்கு கடும் தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!