இரகசிய-அறையில் வைத்து இரு பெண்கள் படுகொலை!!-ஓய்வுபெற்ற-கடற்படை-அதிகாரிகள்-மூவருக்கும்-விளக்கமறியல்
20 Oct, 2026
சம்பவ இடத்திற்கு சென்ற நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டார். இதனையடுத்து சடலம் அடையாளம் காண்பதற்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டது.
குறித்த யுவதி பாலியல் துஸ்பிரையோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் மன்னார் பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் இரண்டு யுவதிகள் நெடுந்தீவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மன்னார் பொலிஸாரும், விசேட புலனாய்வு பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.
சடலமாக மீட்கப்பட்ட யுவதி, யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த சுமார் 21 வயதுடையவர் என தெரிய வருகிறது.
சம்பவ தினத்தில் நெடுந்தீவை சேர்ந்த குறித்த யுவதியை, கைதான இரண்டு பெண்களும் மன்னாரிற்கு அழைத்து வந்தமை விசாரணை மூலம் வெளியாகி உள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட யுவதியின் உறவு முறையான பெண்ணும், இன்னொரு பெண்ணும் கொலையுடன் சம்மந்தப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் நெடுந்தீவை சேர்ந்த குறித்த யுவதியின் மரணத்துடன் தொடர்பு பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் மன்னாரை சேர்ந்த சிலரையும் மன்னார் பொலிஸார் தோடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!