news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மன்னார், மடு பகுதியில் யானை தாக்கியதில் பெண் உயிரிழப்பு!

30 Aug, 2020
மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் காட்டுப் பகுதியில் யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதுடன் அதில், சசிகுமார் கௌசல்யா (38-வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் சடலம் காட்டுப் பகுதியில் இருந்து இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற மடு பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் பண்டிவிருச்சான் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!