news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மரத்திலிருந்து ஆற்றில் குதித்த இரண்டு சிறுவர்கள் தலைகள் ஒன்றாக மோதியதால் நீரில் மூழ்கி பலி - ஸ்ரீபுரவில் சம்பவம்

02 Jul, 2023
ஸ்ரீபுர - திஸ்ஸபுர பிரதேசத்தில் சனிக்கிழமை (01) மாலை ஆற்றில் குளித்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஆற்றில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கிய சிறுவர்கள் ஸ்ரீபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஸ்ரீபுர - திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 12 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்தனர். குறித்த சிறுவர்கள் மரத்தில் இருந்து ஆற்றில் குதித்துள்ளதாகவும், இதன்போது அவர்களின் தலைகள் ஒன்றாக இடித்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ஸ்ரீபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!