news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மருதானை பொலிஸ் சிறைக்கூண்டில் உயிரிழந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

22 Jan, 2025
கொழும்பு,மருதானை பொலிஸ் நிலைய சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (22) இடம்பெற்றுள்ளது. வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று (22) அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் நேற்று செவ்வாய்க்கிழமை (21) மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளார். இதன்போது, இந்த பெண் இன்றைய தினம் அதிகாலை 04.00 மணியளவில் பொலிஸ் நிலைய சிறைக்கூண்டினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பெண், வவுனிக்குளம் - அம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணைக்கு அமைய நேற்று (20) இரவு மருதானை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், சிறைச்சாலையின் இரும்புக் கதவில் தனது பாவாடையை கட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் மருதானை பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குறித்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை நடைபெறும் வரை பொலிஸ் நிலைய பிணவறையில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!