உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
துணை காவல் ஆணையர் பத்மஜா செய்தியாளர் சந்திப்பு நடத்தி கொலை சம்பவம் பற்றி விவரித்தார்.
இருவரும் வசித்து வந்த வீடு
ஸ்வாதியின் உடல் பாகங்கள் ஒரு கவரில் வைக்கப்பட்டு முசி நதியில் வீசப்பட்டது.
"இருவருக்கும் இடையே அடிக்கடி ஏற்பட்டு வந்த சண்டைகள் பற்றி சந்திரகலாவிற்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது.
அவர் ஹைதராபாத்தில் உள்ள உறவினரான கோவர்தனுக்கு தெரிவித்துள்ளார். அவர் வந்து சந்திரகலாவை காவல்துறையிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
ஸ்வாதியை காணவில்லை என புகார் அளிக்க நினைத்துள்ளார் மகேந்தர். காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரைப் பிடித்து விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்" என பத்மஜா தெரிவித்தார்.
சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொலை நடந்துள்ளது.
காவல்துறையினர் மகேந்தரை முசி நதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர் கொடுத்த தகவலின்படி பேரிடர் மீட்பு படையினர் முசி நதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால் எந்த உடல் பாகங்களும் கிடைக்கவில்லை.
ஸ்வாதி இதற்கு முன்னர் கர்ப்பமான போதும் கூட குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என அவரை வற்புறுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். அவர் மீண்டும் கர்ப்பமானது மகேந்தருக்கு பிடிக்கவில்லை.
'தினமும் வந்தவர், அன்று மட்டும் வரவில்லை'
பாலாஜி ஹில்ஸ் பகுதியில் ஒரு சிறிய தெருவில் உள்ள குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் இருவரும் வசித்து வந்துள்ளனர். அந்த வீடு தற்போது பூட்டப்பட்டுள்ளது. பிபிசி அங்கு சென்றபோது ஸ்வாதியின் செருப்பு வெளியில் இருந்தது.
அதே வீட்டின் தரை தளத்தில் வசிக்கும் ஊர்மிளா, ஸ்வாதியை தினமும் சந்தித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று நாள் முழுவதும் அவர் கீழே வரவே இல்லை என்றார்.
"அதற்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை தங்கத்தை அடகு வைக்கச் சென்று வந்ததாக தெரிவித்தார். அவர் கர்ப்பமாக இருந்ததால் எதுவும் சாப்பிடவில்லை எனக் கூறினார். நான் என் வீட்டில் சாப்பிட வைத்தேன். பின்னர் சோர்வாக இருப்பதாகக் கூறிவிட்டு தனது வீட்டிற்கே மீண்டும் சென்றார்" என பிபிசியிடம் தெரிவித்தார் ஊர்மிலா.
தனது கணவர் அடிப்பதால் மோசமான காது வலி இருப்பதாக ஸ்வாதி தன்னிடம் கூறினார் என ஊர்மிளா தெரிவித்தார். கடைசியாக ஸ்வாதியை வெள்ளிக்கிழமை மாலை பார்த்ததாகக் குறிப்பிட்டார்.
"மருத்துவ பரிசோதனைக்குச் சென்றுவிட்டு வருவதாகக் ஸ்வாதி கூறினார்" எனத் தெரிவித்தார் ஊர்மிலா.
, ஸ்வாதியின் தந்தை ராமுலு
பெற்றோர் என்ன சொல்கிறார்கள்?
ஸ்வாதியின் இறப்பு செய்தி கேட்ட உடனே அவரின் தந்தை ராமுலுவும் அவரின் உறவினர்களும் மெடிபள்ளி காவல்நிலையம் சென்றுள்ளனர். "அவர்களின் திருமணத்திற்கு மறுத்ததிலிருந்து ஸ்வாதி தன்னிடம் பேச மறுத்துவிட்டார், அதற்குப் பிறகு என்னிடம் பேசவே இல்லை" என்கிறார் ராமுலு.
"அவர்கள் திருமணத்துக்குப் பிறகு ஹைதராபாத்தில் வசித்து வந்தனர். அவர்களிடைய சண்டை ஏற்பட்டால் நாங்கள் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைப்போம்" என ராமுலு பிபிசியிடம் தெரிவித்தார்.
தனது மகளைக் கொன்றதற்காக மகேந்தர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என ராமுலு கூறுகிறார்.
மகேந்தரின் தந்தை சோமி ரெட்டியிடம் இது தொடர்பாக பேச முயற்சித்தபோது, "நாங்கள் தற்போது எதுவும் கூற முடியாது. எங்களிடமிருந்த முரண்பாடுகளை தீர்த்துவிட்டோம். இது நடக்கும் என நான் நினைக்கவில்லை" எனத் தெரிவித்தார்.
மகேந்தரின் வாக்குமூலத்தின் படி தொழில்நுட்ப மற்றும் இதர ஆதாரங்களைச் சேகரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
"டி.என்.ஏ. பரிசோதனைக்குப் பிறகு வீட்டில் கிடைத்த உடல் பாகங்களை ஸ்வாதியின் குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கிவிடுவோம். இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார் பத்மஜா.
-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!