news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மலசலகூடக் குழியில் விழுந்து சிறுமி பலி - வவுனியாவில் பரிதாபம் !

10 Nov, 2020
  இன்றையதினம் சிறுமியின் பெற்றோர் வெளியில் சென்ற நிலையில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி தவறுதலாக மலசலகூடக் குழியில் விழுந்துள்ளார். இதனை அவதானித்த சிறுமியின் உறவினர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் குறித்த சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்துள்ளார். சம்பவத்தில் ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் சஜீவினி (வயது 6) என்ற சிறுமியே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மலசல கூடத்திற்காக புதிதாக வெட்டப்பட்ட குழியில் மழை நீர் நிரம்பியிருந்த நிலையில் சிறுமி அதனுள் விழுந்து மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!