news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மலேரியா தொற்றால் யாழில் ஒருவர் மரணம்

10 Aug, 2025
யாழ். போதனா வைத்தியசாலையில் மலேரியா தொற்றால் ஒருவர் உயிரிழந்ததாக, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் கொங்கோ நாட்டிலிருந்து நாடு திரும்பியிருந்த நெடுந்தீவை சொந்த இடமாகக் கொண்ட 34 வயதுடைய நபர், கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கடுமையான நோய் நிலையுடன் அனுமதிக்கப்பட்ட இவருக்கு, கடந்த 6 நாட்களாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடுமையான தொற்று மற்றும் பல்வேறு அங்கங்களின் செயற்பாட்டு இழப்பால் நேற்றைய தினம் அவர் உயிரிழந்தார். வைத்திய பரிசோதனைகளின் அடிப்படையில், அவர் மலேரியா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததை யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!