news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மாடு மேய்க்க சென்றவர் முதலை கடித்து மரணம்

03 Dec, 2023
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு ஊத்தவாய்க்கால் ஆற்றின் கரையோரத்தில் மாடு மேய்க்க சென்ற ஒருவர், முதலை கடிக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (03)இடம் பெற்றது. இவ்வாறு முதலையின் தாக்குதலுக்கு உள்ளானவர் சிப்பித்திடல் தம்பலகாமத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான கே.சசிகுமார் வயது(36) என்பவரே இலக்காகியுள்ளார். மாடு மேய்க்க சென்ற இருவரில் ஒருவரே இவ்வாறு குறித்த ஆற்றில் காணாமல் போயூள்ளார் இது தொடர்பில் பொது மக்கள் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டு சடலத்தை மீட்டனர். அவரது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!