மாதுலுவாவே தேரருடைய சடலம் ஒப்படைக்கப்பட்டது-(படங்கள், வீடியோ)
காலஞ்சென்ற வணக்கத்திற்குரிய மாதுலுவாவே சோபித்த தேரரின் பூதவுடல் சிங்கப்புரில் இருந்து இன்று இரவு 9.10 அளவில் கட்டுநாயக்க வானூர்தி தளத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது.
காலஞ்சென்ற 73 வயதான மாதுலுவாவே சோபித்த தேரர் இருதய சந்திரசிகிச்சை மேற்கொண்டதன் பி;ன்னர் மேலதிக சிகிச்சை பெறுவதற்காக சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாதுலுவாவே சோபித தேரர் காலமானார்
சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், கோட்டே சிறி நாகவிகாரையின் விகாராதிபதியுமான, வண.மாதுளுவாவே சோபித தேரர் (வயது73) இன்று அதிகாலையில் காலமானார். சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் தனியார் மருத்துவமனை ஒன்றில் இதய சத்திரசிகிச்சை செய்து கொண்டதையடுத்து இவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, சிங்கப்பூரக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று அதிகாலையில் காலமானார்.
மாதுளுவாவே சோபித தேரர், சிறிலங்காவின் நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை ஒழிப்பதற்கு பெரும் போராட்டங்களை நடத்தியவர் என்பதுடன், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கும், முக்கிய பங்காற்றியவர்.





கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!