news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மாத்தளை மண்சரிவில் 7 பேரின் சடலங்களை அடையாளம் காட்டிய வளர்ப்பு நாய்! - அம்பொக்க கிராமம் முழுமையும் அபாய நிலையில்; 80 குடும்பங்கள் வெளியேற்றம்!

10 Dec, 2025

'தித்வா' புயலைத் தொடர்ந்து மாத்தளை, பல்லேபொல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அம்பொக்க கிராமத்தில் ஏற்பட்ட மண்சரிவில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர். மண்ணுக்குள் புதையுண்டிருந்த வீட்டார்களைக் கண்டுபிடிப்பதற்கு, அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது கடும் மழையால் அந்தக் கிராமத்தின் மலைத்தொடர் மண்சரிவு அபாய நிலையில் காணப்படுவதால், சுமார் 80 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு விகாரை மற்றும் உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உரிய ஆய்வறிக்கை இன்றி அடிக்கடி வெளியேற்ற அறிவுறுத்துவதால், ஒரு நிலையான சூழலை உருவாக்க முடியவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உடனடியாக ஆய்வு மேற்கொள்ளுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!