news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மருமகன்

10 Sep, 2024
நீர்கொழும்பு, மாங்குளி பிரதேசத்தில் மருமகன் தனது மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (09) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாங்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய மாமனாரே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவருக்கும் மகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் சந்தேக நபரான மருமகனால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சந்தேக நபரான மருமகனை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!