மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது
25 Oct, 2026
மாம்பழம் பறிக்க மரத்தில் ஏறிய சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!- (அதிர்ச்சி வீடியோ) 28-10-2015
மரத்தில் இருந்து விழுந்த சிறுவனின் நெஞ்சு பகுதியில் பரகை துண்டு பாய்ந்த நிலையில், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.16 வயதான பாடசாலை மாணவரே இவ்வாறு அனர்த்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
இந்த சம்வம் புளத்சிங்கள பேரகஸ்கொடல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தமது சிறிய தந்தையுடன் வயலுக்கு சென்ற சிறுவன் மாம்பழம் பறிக்கும் நோக்கில் மரத்தில் ஏறியபோது கிழே விழுந்துள்ளார். இதன்போது நிலத்தில் நிலைகுத்தாக இருந்த பலகை துண்டு சிறுவனின் நெஞ்சில் பாய்ந்துள்ளது.
இவ்வாறு சிறுவனின் நெஞ்சில் பாய்ந்துள்ள பலகைதுண்டை வெளியில் எடுப்பதற்கு தற்போது சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக, மருத்துவமனை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
பாடசாலை மாணவனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் குழு போராடி வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!