இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
தனது ஆசிரமத்திற்காக குழந்தைகள் சிறுமிகளை கடத்தியதாகவும்,பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாகவும்,குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட நிலையில் 2019ம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பிச்சென்ற, தன்னைதானே கடவுள் எனவும் இந்து மதத்தின் அதி உயர்மதகுரு அறிவித்துக்கொண்ட,நித்தியானந்தாவே இந்த கற்பனை தேசத்தினை உருவாக்கினார்.
ஈக்குவடோர் பராகுவேயில் நிலங்களை கொள்வனவு செய்வதற்கு மேற்கொண்ட முயற்சிகள்தோல்வியடைந்த பின்னர், அமெரிக்காவின் நியுவார்க் என்ற நகரத்தை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர்,( அதிகாரிகள் கைலாசா என்ற நாடே இல்லை என்பதை அறிந்த பின்னர் கைவிடப்பட்டது)இந்த போலி நாடு பொலிவியாவை நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளது.
செப்டம்பர் - நவம்பர் 2024 ம் ஆண்டுகளிற்கு இடையில் கைலாசாவின் பிரதிநிதிகள் நாலு சுதேசிய மக்கள் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் உடன்படிக்கையில் கைசாத்திட்டுள்ளனர்.நிலங்களை ஆயிரம் வருட குத்தகைக்கு எடுப்பது தொடர்பானதே இந்த உடன்படிக்கை.
அனைத்து கைலாசாவிற்கு சாதகமாக நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு சூழ்நிலையில் பொலிவியாவின் எல்டெபர் கடந்த மாதம் இந்த மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது.
நான் முதன் முதலில் இது தொடர்பான ஒப்பந்தங்களை படித்தபோது நான் கற்பனை செய்கின்றேன் என நினைத்தேன் என்கின்றார் இந்த உண்மையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சில்வானாவிசென்டி.அவை மிகவும் பகுத்தறிவற்றவையாக மாயாஜால கதைகளை போல காணப்பட்டன என அவர் குறிப்பிடுகின்றார்.
கைலாச தொடர்பான ஒப்பந்தங்களை கார்டியன் பார்வையிட்டுள்ளது.' இந்த ஆவணங்களின்படி கைலாசா பெருமளவு நிலங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!