news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மாளிகாவத்தையில் நிவாரண நடவடிக்கையொன்றில் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி : சிலர் காயம் : 6பேர் கைது

21 May, 2020
கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில், நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் இடம்பெற்ற நிவாரண நடவடிக்கையொன்றில்  ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்துள்ளதுடன்  5 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். தனியார் ஒருவரால் இன்று பகல் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போது, அங்கு அதிகளவானவர்கள் ஒன்றுகூடியதால் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய  6 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!