news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு

29 Dec, 2024
புத்தளம் - பழைய மன்னார் வீதியில் 2ஆம் கட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (29) மாலை மின்சாரம் தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் ஏறி நின்று வேலை செய்த இரும்பிலான பலாஞ்சியில் மீது மின்சாரம் பாய்ந்ததில் அதனை தூக்கிச் சென்ற 4 பேர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இருப்பினும், அவர்களில் ஒருவர் தூக்கி விசப்பட்ட நிலையில், உயிர் பிழைத்துள்ளார். எனினும் ஏனைய மூவரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!