news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மின்னேரிய பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

27 Aug, 2023
மின்னேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ கல்லோயா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மாமாவினால் மருமகன் மீது இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (26) இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன் காயமடைந்த நபர் மின்னேரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ரொட்டவெவ, கல்ஓயா பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியுடன் 73 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை தெஹிவளை, ஓர்பன் பிளேஸ் விளையாட்டு மைதானத்துக்கு அருகில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதான நபர் கல்கி‍சை, படோவிட்ட பகுதியை சேர்ந்த 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 19ஆம் திகதி ஓர்பன் பிளேஸ் விளையாட்டு மைதானத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபர் ஒருவர் காயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பில் தெஹிவளை, சுமுது மாவத்தை பகுதியில் நேற்று (26) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது அவரது பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!