news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மிருகக் காட்சி சாலையில் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் சிங்கம்! எந்த நாட்டில் தெரியுமா?

11 Nov, 2020
நைஜீரியாவிலுள்ள மிருகக் காட்சி சாலையொன்றில் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் சிங்கத்தைக் கண்டு பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடுனா என்ற இடத்திலுள்ள காம்ஜி கேட் விலங்கியல் பூங்காவில் ஏராளமான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் சிங்கமொன்று எலும்பும் தோலுமாக இருப்பதை பார்வையாளர்கள் ஒருவர் புகைப்படம் எடுத்து இணைத்தில் வெளியிட்டுள்ளார். கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் போதிய உணவின்மையால் இதுபோல பல உயிரினங்கள் அங்கு இருப்பதாகவும் அவற்றை மீட்க வேண்டும் என்றும் உயிரியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!