news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு

12 Feb, 2024
மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தின் கடையொன்றில் கொள்ளையிட வந்தவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) இரவு பெண் ஒருவர் மீது துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளனர். பொருளாதார மையத்தில் உள்ள கடையொன்றின் பெண் காசாளர் மீதே இனம்தெரியாாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!