பனிப்போரின் உலகளாவிய வரலாற்றுப் பாடம் : இன்றைய அணுஆயுத ஆபத்துகளை எதிர்கொள்வதற்கான ஒரு மூலோபாய வரைபடம்
05 Nov, 2026
மஹிந்த சமரசிங்கவைப் போன்று எரிக் சொல்ஹெய்ம், சில விடயங்களை மறைத்துப் பேசவில்லை. அதாவது, எந்தநாடு இந்த முயற்சியை எடுத்தது என்பதை அவர் மறைக்கவில்லை. இந்தியா, ஐ.நாவின் ஆதரவுடன் அமெரிக்காவே அந்த மீட்பு முயற்சிகளில் இறங்கத்தயாராக இருந்தது என்றும் அவர் கூறியிருந்தார்.
2009 ஏப்ரல் மாதம் அந்த வாய்ப்பை பிரபாகரனே நிராகரித்து விட்டார் என்றும், அவர் குறிப்பிட்டிருந்தார். அதனால் தான், அவரும், அவரது தளபதிகளும், பொதுமக்களும் அழிவுகளைச் சந்திக்க நேரிட்டது என்றும் எரிக் சொல்ஹெய்ம் கூறியிரு்ந்தார். அந்த திட்டம் செயற்படுத்தப்பட்டிருந்தால், அனைவரும் பதிவு செய்யப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்டு, தென்பகுதியிலோ, அல்லது வெளிநாட்டுக்கோ கொண்டு செல்லப்பட்டிருப்பார்கள் என்பது எரிக் சொல்ஹெய்மின் நிலைப்பாடு.
போர் முடிந்து 11 ஆண்டுகளுக்குப் பின்னர், எரிக் சொல்ஹெய்ம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த பின்னர் தான், அரச தரப்பின் பேச்சுக் குழு தலைவராக இருந்த மகிந்த சமரசிங்க, பிரபாகரனைத் தப்பிக்க விடக்கூடாது என்பதற்காகவே, அந்த திட்டத்தை தாங்கள் நிராகரித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இரண்டுமுறை இவ்வாறான கப்பல் மீட்பு முயற்சிக்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. ஒன்றை ஆரம்பக்கட்டத்திலேயே அரசாங்கம் நிராகரித்துவிட்டது. இன்னொன்றை புலிகள் தரப்பு முன்வைத்த நிபந்தனைகளுக்கு இணங்கமுடியாதென மறுத்துவிட்டது என்பது உண்மை.
இப்போது மஹிந்த சமரசிங்கவும், எரிக்சொல்ஹெய்மும் முன்வைத்துள்ள கருத்துக்களை வைத்துப் பார்க்கின்ற போது, ஒரு விடயம், தெளிவாகிறது. அரசாங்கத் தரப்பு பொதுமக்களை மீட்பது என்ற போர்வையில் பிரபாகரன் தப்பிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது என்பதே அது.
அவர்களின் முழு இலக்கும் புலிகளைத் தப்பவிடக்கூடாது என்பதாகவே இருந்தது.பொதுமக்களுககு ஏற்படக் கூடிய அபாயத்தைக் கருத்தில் கொள்ளவில்லை. அதேவேளை, எரிக் சொல்ஹெய்மின் கூற்றுப்படி, பிரபாகரன் தப்பிச் செல்வதற்கு தயாராக இருக்கவில்லை. அவர் நினைந்திருந்தால் அதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டபோது, பயன்படுத்திக்கொண்டிருந்திருப்பார்.
அவர் தனது உயிர் ஆபத்தில் இருப்பதையிட்டு கவலைகொள்ளவில்லை. அதேவேளை, எரிக் சொல்ஹெய்ம் கடந்த செப்ரெம்பரில் டெய்லி மிரருக்கு வழங்கியிருந்த செவ்வியிலேயே ஒரு குழப்பமான கூற்றை வெளிப்படுத்தியிருந்தார். புலிகளுடனான சமாதான முயற்சிகள் இந்தியாவின் ஆதரவுடன் தான் முன்னெடுக்கப்பட்டது என்றும், அமைதியான முறையில் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றே இந்தியா விரும்பியது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் 2008 செப்ரெம்பருக்குப் பின்னர் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது- இராணுவ தீர்வை வலியுறுத்தியது என்றும், எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருந்தார். அவ்வாறாயின், போரின் இறுதிக்கட்டத்தில், அமெரிக்கா முன்னெடுத்த முயற்சிக்கு இந்தியா எவ்வாறு ஆதரவளித்திருக்கும் என்ற கேள்வி உள்ளது.
11 ஆண்டுகளுக்கு முன்னர் முடித்து வைக்கப்பட்ட போரின், எல்லா நிகழ்வுகளுக்கும் சாட்சியங்கள் இல்லை. சாட்சியமின்றி நடத்தப்பட்ட போர் அது. அதனால் தான் அதில் அரங்கேறிய மீறல்கள் குறித்து இன்னும் வலுவான குரல்கள் ஒலிக்கவில்லை. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கூட, தான் ஆட்சியில் இருந்த 8 ஆண்டுகளில், இலங்கையில் நடந்த இனப்படுகொலையைப் பற்றி பேசவில்லை.
இப்போது தான் அதுபற்றிப் பேசும் நிலைக்கு வந்திருக்கிறார். அதனையும் கூட அவர் ஐ.நாவின் தோல்வியாக நாடுகளுக்கிடையிலான முரண்பாட்டின் விளைவாக அடையாளம் காட்ட முனைந்திருக்கிறார். ஆனால் உண்மை அது மாத்திரமல்ல, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கூட, தவறிழைத்திருக்கின்றன.
அந்த தவறுகளை மறைக்கவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை கூற முனைந்திருக்கிறார்கள். அதேவேளை, புலிகள் உள்ளிட்ட பல நாடுகளின் தவறுகளை இலங்கை அரசு தனக்குச் சாதகமானதாக்கிக் கொண்டதால் தான், போரில் வெற்றியைப் பெற்றுக் கொண்டது மாத்திரமன்றி இன்றுவரை பொறுப்புக்கூறலில் இருந்து தப்பியும் வருகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!