news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மீண்டும் காதலிக்கிறேன் - வனிதாவின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

19 Dec, 2020
பீட்டர் பால் உடன் பிரச்சனை ஏற்பட்டு சமீபத்தில் பிரிந்த வனிதா, தற்போது மீண்டும் காதலிப்பதாக பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகை வனிதா கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுவிட்டார். இதனிடையே கடந்த ஜூன் மாதம் இவர் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. வனிதா - பீட்டர் பால் திருமண உறவு சில மாதங்களே நீடித்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக பிரிந்து விட்டனர். வனிதாவின் இன்ஸ்டா பதிவு இந்நிலையில், வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் காதலிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். ஆனால் எதற்காக அவ்வாறு பதிவு செய்தார், என்பது தெரியவில்லை. வனிதாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!