news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மீன்களில் கொரோனா - இந்தியாவிலிருந்து மீன் இறக்குமதியை தடைசெய்தது சீனா

13 Nov, 2020
இந்திய நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதால், இறக்குமதிக்கு ஒருவாரம் தடை விதிப்பதாகச் சீனா தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து சீனாவுக்கு அனுப்பிய பதப்படுத்திய மீன்களின் மாதிரிகளை எடுத்துச் சோதனை செய்ததில் 3 மாதிரிகளில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாகச் சீனச் சுங்கத்துறை தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து மீன்களை அனுப்பும் குறித்த நிறுவனத்திடம் இருந்து மீன்களை இறக்குமதி செய்ய ஒருவார காலத்திற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!