news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மீன் பிடிக்கச் சென்ற பெண்ணை இழுத்துச் சென்ற முதலை

15 Oct, 2024
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மீன் பிடிப்பதற்காக சென்ற பெண்ணை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று நேற்று திங்கட்கிழமை (14) மாலை இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான சொறிக் கல்முனை புட்டியாறு பகுதியில் பெண் ஒருவர் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இதன்போது , சொறிக் கல்முனையைச் பகுதியை சேர்ந்த 58 வயதான பெண்ணை முதலை இழுத்து சென்றுள்ளது. முதலை இழுத்து சென்ற பெண் இதுவரை உயிரிடனோ அல்லது சடலமோ மீட்கப்படவில்லை. இப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஆறுகளில் நீர் அதிகரித்துள்ளது. காரைதீவு – மாவடிப்பள்ளி நீர் ஓடையில் வழமையாக முதலைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இவைகளும் மழை வெள்ளத்துடன் கிட்டங்கி ஆறு உட்பட பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. இவ்வாறு முதலை நடமாட்டம் உள்ள இடங்கள், அபாயகரமான பிரதேசங்களில் குறித்த பிரதேச சபைகள் ,சுற்றுச் சூழல் அதிகாரிகள், வன பரிபாலன சபையினர், பொதுமக்களுக்கு தெளிவூட்டும் வகையில் எச்சரிக்கை பலகைகளை காட்சிப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!