news@ilakkiyainfo.com

பிரிவுகள்

முகமாலையில் பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் மரணம்

06 Nov, 2022
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா சென்று திரும்பிய பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் மீசாலை பகுதியை சேர்ந்த குகதாசன் விமல்ராஜ் , (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு பேருந்தில் சுற்றுலா சென்று மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வேளை முகமாலை இத்தாவில் பகுதியில் பேருந்தில் இருந்து குறித்த நபர் தவறி விழுந்துள்ளார். அதில் படுகாயமடைந்த நபரை , பளை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை மாற்றப்பட்டார் எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!