news@ilakkiyainfo.com

பிரிவுகள்

முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி

08 Feb, 2023
குருநாகல் வாவி சுற்றுவட்ட வீதியில் யத்தம் பலாவையிலிருந்து பமுனுகெதர நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி நேற்று (7) விபத்துக்குள்ளானதில் 9 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உள்ளிட்ட ஐவர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 9 மாதக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!