ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
நடிகை ஜெயபிரதா தான் அவர். நடிகை ஜெயபிரதா வெவ்வேறு மொழிகளில் சுமார் 300 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். கடந்த 1974-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘Bhoomi Kosam’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இந்தப் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்காக ஜெயபிரதாவுக்கு 10 ரூபாய் சம்பளமாக கொடுக்கபட்டதாக கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறினார். சர்கம் (1979), ஊரிக்கி மொனகாடு (1981), கம்சோர் (1982), கவிரத்ன காளிதாசா (1983), சாகர சங்கமம் (1983), தோஹ்ஃபா (1984), ஷராபி (1984), மக்ஸாத் (1984), சஞ்சோக் (1985), அக்ரி ராஸ்தா (1986), சிம்ஹாசனம் (1986), சிந்தூர் (1987), சம்சாரம்(Samsaram) 1988, எலான்-இ-ஜங் (1989), ஆஜ் கா அர்ஜுன் (1990), தானேதார் (1990), மா, ஹப்பா (1999), மற்றும் சப்தவேதி (2000) ஆகியவை அவர் நடித்த சிறந்த படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
தமிழில் கமல்ஹாசன் உடன் இணைந்து ‘மன்மத லீலை’, ‘சலங்கை ஒலி’ படத்தில் நடித்து இருந்தார்.
ரஜினி - கமல் நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த 2008-ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தில் அவர் நடித்திருந்தார்.
சூப்பர் ஸ்டார் நடிகர்களான அமிதாப் பச்சன், ரஜினி, கமல் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார்.
ஆனால், நடிகை ஜெயபிரதா தொடக்கத்தில் நடிக்க விரும்பவில்லை என கூறப்படுகிறது. அவர் மருத்துவராக வேண்டும் என்றே விரும்பி உள்ளார். நடிகை ஜெயபிரதா தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நஹாட்டாவை(Srikanth Nahata) மணந்தார். ஆனால் அவருக்கு ஏற்கனவே சந்திரா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் இருந்தனர்.
30 ஆண்டுகளாக, நடிகைகள் ஜெயபிரதா மற்றும் ஸ்ரீதேவிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. Maqsaad திரைபடத்தில் ஜெயபிரதா மற்றும் ஸ்ரீதேவி திரையில் ஒன்றாக தோன்றினாலும், வெளியே இருவரும் பேசிக்கொள்வதை தவிர்த்ததாக கூறப்பட்டது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!