news@ilakkiyainfo.com

பிரிவுகள்

"முதியவர் மீது நுரை ஸ்பிரே அடித்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது",

23 Sep, 2024
"உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜான்சி பகுதியில், சைக்கிளில் சென்ற முதியவர் மீது நுரை ஸ்பிரே அடித்து கிண்டலடிக்கும் விதமாக யூடியூபர் வினய் யாதவ் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து முதியவரை பொதுவெளியில் துன்புறுத்திய யூடியூபர் வினய் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து யூடியூபர் வினய் யாதவை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பின்பு வினய் யாதவ் கால் வலியோடு மெதுவாக நடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. யூடியூபர் வினய் யாதவின் ஆக்சனுக்கு இதுதான் சரியான ரியாக்சன் என்று இந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!