news@ilakkiyainfo.com

பிரிவுகள்

முல்லைத்தீவில் கத்திமுனையில் மிரட்டி நகை கொள்ளை; கிராம மக்கள் செய்த சம்பவம்

16 Jul, 2025
மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு – முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் உள்ள வளர்மதி மைதானத்திற்கு அருகாமை இரவு 7 மணியளவில் வீதியால் பயணித்தபோது கொள்ளையர்கள் இருவர் குறித்த பெண்னை வழிமறித்து கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுண் தங்க சங்கலியை பறித்து கொண்டு தப்பி சென்றிருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக குறித்த கிராம மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதனையடுத்து ஊர்மக்கள் இணைந்து கொள்ளையர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவத்தில் 32, 22 வயதுடைய தர்மபுரம் விசுவமடு பகுதியினை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!