தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
07 Nov, 2026
இவ்வாறான பிண்ணனியில் மூன்று பெண்கள் மாத்திரம் வசித்துவரும் குறித்த வீட்டின் கூரையை பிரித்து வீட்டினுள் நுழைந்த மூன்று சந்தேக நபர்கள் குறித்த வீட்டில் இருந்த தாய், மகள், தாயின் தாய் ஆகிய மூவரின் கண்கள் கைகளை கட்டிவிட்டு இவர் சேமித்த வைத்த 90000 ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தினை கொள்ளையடித்துள்ளனர்.
அத்தோடு மகளின் கழுத்தில் கத்தியை வைத்து மகளை கொலை செய்யப்போவதாக மிரட்டி நகைகளை கோரி அவர்களிடம் இருந்த சுமார் ஆறு பவுனுக்கு மேற்ப்பட்ட நகைகளையும் கொள்ளையடித்து அவர்களின் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (04) இரவு 11 மணியளவில் வீட்டில் நுழைந்த குறித்த திருடர்கள் நேற்று (05) அதிகாலை 3 மணிக்கு பின்னரே வீட்டை விட்டு சென்றதாகவும் இவர்களை துன்புருத்தியதாகவும் குறித்த தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார் .
முன்னைய காலத்தில் நாம் எந்த பயமும் இன்றி வாழ்ந்தோம் ஆனால் இன்று நிம்மதியாக வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எம்மை பொலிஸ் நிலையத்திறகோ ஊடகங்களுக்கோ தகவல் வழங்க கூடாது எனவும் அதை மீறி கூறினால் மூவரையும் வந்து கொலை செய்வோம் எனவும் மிரட்டி சென்றுள்ளதாக தாய் மேலும் தெரிவித்துள்ளார் .
இந்த நிலையில் இன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன்றமை குறிப்பிடத்தக்கது .
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!