news@ilakkiyainfo.com

பிரிவுகள்

முல்லைத்தீவு மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி

23 May, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவன் முதலாம் வட்டாரம் கைவேலி புதுக்குடியிருப்பை சேர்ந்த 20 வயதுடைய  பிரதீப்குமார் வளர்சிகன் எனவும்  மேலும் குறித்த மாணவன் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் உயதரப்பரீட்சை 2019 வர்த்தகப்பிரிவில் மாவட்ட ரீதியில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் எனவும் அறியமுடிகின்றது. சம்பவ இடத்திற்குச் சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!