உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
எல்.ஐ சி முகவரை திருமணம் செய்வதாக அவரது வீட்டில் திருடிய பெண்கள்
எல்.ஐ.சி ஏஜென்ட் அந்த நான்கு பெண்களையும் வரவேற்றுப் பேசியிருக்கிறார். அப்போது திருமணத்திற்கு வாங்கி வைத்திருந்த தங்க வளையல், மோதிரம் உள்ளிட்ட நகைகளையும் அந்தப் பெண்களிடம் காண்பித்துவிட்டு மேஜை டிராயரில் வைத்தார்.
நான்கு பெண்களும் எல்.ஐ.சி ஏஜென்ட்டின் வீட்டில் சிறிதுநேரம் இருந்து பேசிவிட்டுச் சென்றனர். சில நாட்களுக்குப்பிறகு மேஜை டிராயரில் இருந்த நகைகளைப் பார்த்தபோதுதான், நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.
வீடுமுழுவதும் நகையைத்தேடியும் கிடைக்காததால் திருமணம் செய்வதாக வீட்டுக்கு வந்த மதுரையைச் சேர்ந்த நான்கு பெண்கள் மீதும் சந்தேகம் எழுந்தது.
திருமண வரன் பார்க்க வந்த முருகேஸ்வரியைத் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து மற்றொரு பெண்ணின் எண்ணில் தொடர்புகொண்டு பேசியபோது அவரைத் திருமணம் செய்ய முருகேஸ்வரிக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். நகை குறித்து கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாகப் பேசியிருக்கிறார்.
கைது செய்யப்பட்ட பெண்கள்
இதையடுத்து 8 சவரன் நகை திருடுபோனதாக எல்.ஐ.சி ஏஜென்ட் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது நகையைத் திருடி சென்றது மதுரை கும்பல்தான் என்பது தெரியவந்தது.
போலீசார் மதுரையைச் சேர்ந்த முருகேஸ்வரி, கார்த்திகையாயினி, முத்துலட்சுமி, போதும்பொன்னு ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். இவர்கள் திருமணம் செய்வதாக வேறு யாரையாவது ஏமாற்றி இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!