news@ilakkiyainfo.com

பிரிவுகள்

“மேலாடையை உருவி... அடித்து, உதைத்து...” அரசு மருத்துவரை ஆட்டோவில் ஏற்றிய போலீசார்... பதற வைக்கும் பின்னணி!-VIDEO

18 May, 2020
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மருத்துவர் ஒருவரை போலீசார் சிலர் கைகளை கட்டி தாக்கிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் ஆர்.கே. மீனா கூறுகையில், 'மருத்துவர் சுதாகர் மது போதையில் இருந்த நிலையில் அங்கிருந்த போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதே போல கான்ஸ்டபிள் ஒருவரின் செல்போனை பிடுங்கி வீசியுள்ளார். அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். சிகிச்சை முடிந்த பின் அவர் மீது வழக்குப்பதிவு செய்வோம். அதே போல, சுதாகரை தாக்கிய கான்ஸ்டபிள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம்' என தெரிவித்தார்.  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!