மே 17: பாலசிங்கத்தின் வாய்ஜாலம் இல்லை என்றால் புலிகள் கதை என்றோ முடிந்திருக்கும்!!
கேயாஸ் தியரி என ஒரு வாதம் உண்டு, அதாவது ஒரு சின்ன நிகழ்வின் தொடர்விளைவு உலகின் அது சம்பந்தம் இல்லாதவர்களை பாதிக்கும் என்பார்கள்.
அப்படி ஈரானின் ஒரு மூலையில் பிறந்த கோமேனி, மக்களை திரட்டி புரட்சி செய்து அரசனை விரட்டி ஆட்சியினை பிடித்தார், இது அந்நாட்டின் உள்விவகாரம், ஆனால் அது பாதித்த விஷயம் ஏராளம்.
அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் அப்படி ஒரு நிலை வர சோவியத் யூனியன் களமிறங்கியது, அது அமெரிக்கா பின்லேடனை இறக்கி வேறுவிதமாக பிரச்சாரத்தில் இறங்கிற்று, உலக இஸ்லாமியரே ஒன்று கூடுங்கள், ஆப்கன் விடுதலைக்கு என விநோத பிரச்சாரம் செய்யபட்டது, சிஐஏவின் பெரும் உத்தி அது.
அப்படியானால் பாலஸ்தீன் விடுதலைக்கு இஸ்லாமியர் கூட கூடாதா? என ஒரு இஸ்லாமியனும் கேட்கவில்லை என்பதுதான் ஆச்சரியம், ஆனால் ஆப்கான் போர்முடிந்து அதுபற்றி பின்லேடன் சிந்தித்து கேட்ட பொழுதுதான் அவருக்கும் அமெரிக்காவிற்கும் மோதிற்று, பின் என்னவெல்லாமோ நடந்து முடிந்தது.
சோவியத் ஆப்கான் மண்ணில் யுத்தம் நடத்தியபொழுதுதான், உலக நாடுகளின் பார்வை இலங்கையில் பதிந்தது, காரணம் கேந்திர முக்கியத்துமிக்க தீவு, தவிரமும் அதன் மிக அருகில் அமெரிக்காவின் டீகோ கார்சியா எனும் மர்ம தீவு, அது என்ன இங்கு அமெரிக்க தீவு? அப்படித்தான் புறம்போக்கு தீவு எல்லாம் உலக தாதாவிற்கு சொந்தம்.
........................................................................................................................................................
*( திருடப்பட்ட இந்து சமுத்திரத் தீவு - ஆவணப்படம்
"டியாகோ கார்சியா", இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் நடுவில் உள்ள சின்னஞ்சிறிய தீவு. பிரிட்டிஷ் காலனியான தீவுவாசிகள் ஆப்பிரிக்கா, அல்லது இந்தியாவில் இருந்து சென்று குடியேறியவர்கள். ஒரு நாள் திடீரென வந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் தீவுவாசிகளை இரவோடிரவாக வெளியேறச் சொன்னார்கள்.
.................................................................................................................................................................
விளைவு, இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் நடந்த வல்லரசுகளின் விளையாட்டு ஈழத்திலும் நடந்தது, அதுவரை அடிக்கடி நடக்கும் கலவரங்கள் 1983ல் பெரிதாக நடக்கவைக்கபட்டன, உபயம் ஜெயவர்த்தனே.
ஒரு வில்லன் அந்த அரசு முனையில் களமிறங்கினால் இன்னொரு வில்லன் போராளி முனையில் களமிறங்கியது, ஈழபோராளிகள் லெபனான் சென்று யாசர் அராபத்திடம் பயிற்சி பெற்றனர், அராபத்திற்கு ஈழவிடுதலையில் அவ்வளவு ஆர்வமா? என கேட்ககூடாது, ஏதோ அவருக்கு நிர்பந்தம் மனிதர் அழைத்து பயிற்சி எல்லாம் கொடுத்தார், இன்றைய ஈழத்து வைகுண்டராஜன் டக்ளஸ் எல்லாம் அந்த கோஷ்டி.இதில் யாருடனும் சரிவர ஒட்டாமல் அல்லது , யாரையும் நம்பாமல் பிரபகரன் ஒரு இயக்கம் நடத்தினார், அதன் பெயர் புதிய தமிழ் புலிகள்.
புலிக்கொடி. அது என்ன புலி? ஒன்றுமில்லை பிரபாகரன் தனது கடைசி கல்விகற்கும் போது ஒரு தமிழாசிரியடரிம் டியூசன் சென்றார், அவர்தான் சோழன், புலி , தஞ்சை என இவரை மாற்றினார், பிரபாகரன் ஏதோ செய்துகொண்டிருந்தார், ஜெயவர்த்தனே அட்டகாசம் உச்சத்தை எட்டியது, உபயம் அமெரிக்கா.
பதிலுக்கு போராளிகளின் தாக்குதலும் சும்மா இல்லை, ஈரோஸ் இயக்கம் (அப்படி ஒரு இயக்கம் இருந்தது) எல்லாம் துணிந்து இஸ்ரேலிய மோசாத் ஏஜண்டுகளையே கொழும்பில் தாக்கிற்று, பெரும் மூளை என கருதபடும் மொசாத்தின் அடையாளம் எப்படி இவர்களுக்கு லீக் ஆனது என்பதில் இஸ்ரேலே அலறியது.
ஏதோ ஒரு சக்தி சொல்லிகொடுக்காமல் இது சாத்தியமில்லை.
பத்மநாபா ஒருபடி மேலே சென்று ஷெல் குண்டுகளை தயாரித்தார், சிங்கள ராணுவம் அலற ஆரம்பித்தது.
லண்டனில் பேராசியரான பாலசிங்கம், திடீரென புலிகள் இயக்கத்தில் இணைந்தார், அதுவரை அவர் ஏன் வரவில்லை? தேசபற்று இல்லையா என்றெல்லாம் கேட்க கூடாது, அப்பொழுதுதான் ஞானம் பிறந்திருக்கலாம், ஆனால் அவர் வந்தபின் புலிகளுக்கு யானை பலம் வந்தது, எப்படி என்றேல்லாம் கேட்ககூடாது.
இப்படி ஒரு சிக்கலான நிலை செல்ல, இந்தியா அவர்களை கூப்பிட்டு பயிற்சி எல்லாம் கொடுத்து போராளிகள் ஆக்கிற்று.
வங்கபோரின் பொழுதே இலங்கை வடபகுதி விமான நிலையத்தினை பாகிஸ்தான் பயன்படுத்திகொள்ள வலிய அழைத்ததுதான் இன்றைய நட்புநாடு இலங்கை, அதிலிருந்தே அங்கு ராணுவதளம் அமைக்கும் ஆசை இந்தியாவிற்கு வந்தது, அப்படி அமைதிபடையும் சென்றது
விடுமா வல்லரசுகள்? உலகெல்லாம் அவர்கள் ராணுவ தளம் மட்டுமே இருக்கவேண்டும் என கனவு காண்பவை. சோவியத்திற்கு அன்று கியூபா அருகே ஒரு தீவும், சிரியாவும் தான் நாட்டிற்கு வெளியே ராணுவ தளம், ஆனால் அமெரிகாவிற்கு உலகெல்லாம் 35 தளம் உண்டு, ஏன் என்று கேட்க கூடாது.
இப்படி ரஷ்ய ஆதரவு இந்தியா இலங்கையில் காலூன்றுவதை தாங்கமுடியுமா? ஆப்கானில் ரஷ்யபடைகளுக்கு எதிராக பயன்படுத்தபட்ட "உலக இஸ்லாமியரே ஒன்று கூடுங்கள்", ஆக்கிரமிப்பு படைகளை விரட்டுங்கள்" என்ற சத்தம் இலங்கையில் உலக தமிழர்களே ஒன்று கூடுங்கள் என ஒலித்தது.
ஒரு கட்டத்தில் இந்திய முகாமில் இருந்த இயக்கங்கள் ஒழிக்கபட்டன, டெலோ அத்தகையது, அதன் பின் கம்யூனிச போராளி குழு ஒழிக்கபட்டது. பத்மநாபா அத்தகையவர்.
சிலர் கட்டப்பா போல புலிகளிடம் அடிமைகளாக இணைந்தனர், ஈரோஸ் இயக்கம் அப்படியானது, பெரும் போராளி ஒருவர் உண்டென்றால் அது ஈரோஸ் பாலகுமார்தான், யாருக்காவது அவரை தமிழகத்தில் தெரியுமா?
இப்படி ஒரு முகாமினை சார்ந்த போராளிகள் குழுவே ஒழிக்கபட்டது, சோவியத் ஆப்கனை விட்டு வெளியேறியதும், இந்திய அமைதிபடையும் இலங்கை விட்டு வெளியேறிற்று, கொஞ்ச நாளில் சோவியத் யூனியன் சிதறியும் போயிற்று.
இதுவரை இருதுருவமாக இருந்த உலகம் அதன் பின் ஒரு துருவமாயிற்று, இதன் போக்கு மகா சிக்கலானது, அதுவரை குறித்துவைத்தவர்கள் எல்லாம் வரிசையாக கொல்லபட்டனர். முதலாமவர் ராஜிவ் காந்தி, அடுத்து சிங்களரான அமெரிக்க எதிரி பிரேமதாச, அடுத்து சதாம் உசேன் , அராபத் என அடுத்தடுத்து பந்தாடபட்டனர், கடாபியும் வரிசையில் சேர்ந்துகொண்டார், ராஜிவும், பிரேமதாசாவும் சாக, பிரபாகரனின் ஜென்ம எதிரி ஜெயவர்தனேவுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கபட்டது, ஏன் என்று கேட்க கூடாது, அது அமெரிக்க ஆசீர்வாதம்.இப்படியான ஒற்றைதுருவ ஆட்சியில் புலிகளுக்கு பெரும் வெற்றி, எதிர்த்துகேட்க ஒருவரும் இல்லை, எல்லாம் பின்லேடன் ஒரே ஒரு அடி அடிக்கும் வரை. ஒரு அடிதான், அவ்வளவுதான் முடியும், ஆனால் சரியாக அடித்தார்.
அதன் பின் காட்சிகள் மாறின, உலகின் தீவிரவாத குழுக்கள் இனி ஒன்றுகூட மிஞ்சகூடாது என கங்கணம் கட்டபட்டது.
அராபத் முதலில் குறிவைக்கபட்டார், அதன் பின் உலகளாவிய நிலையில் தீவிரவாதிகளுக்கு எதிரான குறி மகா தீவிரமாக்கபட்டது, ஹமாசின் யாசின் மாலிக் எனும் முதியவர் கொடூரமாக கொல்லபட்டார்.
புலிகளும் அந்த தடைக்குள் வந்தனர், புலிதலமையோ 1986ம் ஆண்டு கனவிலே இருந்தது, மாறிவிட்ட காலத்தையோ ஒற்றை துருவத்தையோ அதனால் புரிந்துகொள்ளமுடியவில்லை,
"நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம் என்பது திறவோர்"
என்பது போல உலக நிலைக்கு தக்கவாரே போராட்டம் நடக்கும் என சொன்னாலும் அது ஏற்கவில்லை, எல்லாம் எமது வீரம் என்றே சொல்லிகொண்டிருந்தது.
ஆனால் பாலசிங்கம் விலகிகொண்டு அமைதியானார், அதன் பின் அவர்குரல் ஒலிக்கவில்லை, அப்படியே அமைதியும் ஆனார். அதுவரை உலகசந்தையில் ஆயுதம் வாங்கிய கேபியும் உலக சிக்கலை எடுத்து சொன்னார், விளைவு அவர் பதவி பறிக்கபட்டு இன்னொருவரிடம் கொடுக்கபட்டது, அந்த இன்னொருவர் வன்னி தாண்டாதவர்.
பாலசிங்கம், கேபி, தொடர்ந்து கருணாவும் விலக மறுகணம் யுத்தம் தொடங்கியது, எப்படி எனில் அது ஒரு சிக்னல், பாலசிங்கம் இல்லை, இனி இயக்கத்தை காப்பாற்ற ஆளில்லை, பாலசிங்கத்தின் வாய்ஜாலம் இல்லை என்றால் புலிகள் கதை என்றோ முடிந்திருக்கும்.
அவர் ஏன் 1980ல்தான் இயக்கத்திற்குள் வந்தார், 2004ல் வெளியேரினார் என்பதும் மகா சிக்கலான விஷயம்.
யுத்தத்திற்கு முன்பே பலமுறை புலிகளுக்கு அமெரிக்க தூதரால் கடும் எச்சரிக்கை விடுக்கபட்டது, ஆனால் வழக்கம்போல கண்டுகொள்ளவில்லை.
அதுவரை அசைக்கபடமுடியாத இயக்கம் என கருதபட்ட புலிகள் முருங்கை மரமாக சரிந்தனர், அந்த மாய அரண் ஒன்றுமே இல்லாமல் தகர்க்கபட்டது.
இதில் இறுதியில் செத்தது ஏராளமான பொதுமக்கள் என்பதுதான் சோகம்.
1983ல் கொழும்பு எரியும்போது இந்தியா தலையிடாவிட்டால் உயிர்பலி கூடியிருக்கும், இந்தியா தடுத்தது.
1987ல் வடமராட்சியில் இந்தியா தலையிடாவிட்டால் அன்றே யாழ்பாணம் அழிந்திருக்கும். இந்தியா காப்பாற்றியது, ஆனால் பின்னாளில் இந்தியாவும் தலையிடமுடியாதவாறு அதன் கரங்கள் கட்டிபோடபட்டன, அதாவது இந்தியா நினைத்தாலும் யுத்தம் நிற்காது, அப்படியே இந்திய படைகளை அனுப்ப நினைத்தாலும், 1989ல் அடிவாங்கிய ராணுவம் செல்ல நினைக்காது. உலக நிலையும் மாறிவிட்டது.
நடக்க கூடாதது எல்லாம் நடந்து முடிந்தது. ஆனால் இனபடுகொலை எனும் வாதத்தை எளிதாக இலங்கை கடந்தது, காரணம் வன்னிபகுதியில்தான் யுத்தமே அன்றி, யாழ்பாணத்திலும், மட்டகிளப்பிலும் , கொழும்பிலும் ஒரு தமிழன் மீதும் ஒரு குண்டூசி கூட படவில்லை.
தமிழகத்தில் 2009ல் முத்துகுமார் முதல் பலர் தீகுளிக்க, யாழ்பாணமோ, மட்டகிளப்போ, திரிகோணமலையோ மிக இயல்பாகத்தான் இருந்தது.
ஈழ பிரச்சினை அப்படியே இருக்கின்றது, ஆனால் ஆதியில் போராடிய பத்மநாபா இல்லை, டெலோ சபாரத்தினம் இல்லை, உமா மகேஸ்வரன் இல்லை, ஓரளவு உரிமை பெற்றுகொடுத்த ராஜிவ் இல்லை.
இவர்களை எல்லாம் கொன்ற புலிகளும் இல்லை, போராட்டத்திற்கும் மங்களம் பாடியாயிற்று.
தமிழரின் உரிமை கொடுக்காமல் அங்கு அமைதி இல்லை எனும் நிலையிலிருந்து, புலிகளை ஒழிக்காமல் அங்கு அமைதியினை கொண்டுவரமுடியாது எனும் நிலைக்கு கொண்டுவந்தது நிச்சயமாக புலிகள்.
சுருக்கமாக சொன்னால் வல்லரசுகளின் விளையாட்டில் ஒரு இயக்கத்தை வைத்தே சகலத்தையும் அழித்து பின் அவர்களையும் அழித்து சுத்தமாக துடைத்தொழிப்பது.
அதன்பின் தமிழகத்தில் டெல்லிக்கு எதிரான விஷயங்களை பரப்பி விடுவது, ஒரு வித கொதிநிலையினை உண்டாக்கிவிட்ட்டாகிவிட்டதும் அவர்கள்தான், இந்தியா தமிழருக்கு எதிரி, ஈழத்தை அழித்தது இந்தியா, முள்ளிவாய்க்காலை நடத்தியது இந்தியா சரி, அப்படியானால் அமெரிக்க கப்பல்களாவது வந்து காப்பாற்றி இருக்கலாம் அல்லவா?, அதனை பற்றி எல்லாம் பேச கூடாது.
பிரபாகரன் மீது ஒரு அனுதாபம் சொல்லவேண்டுமென்றால் பின்லேடன் போலவே அவரும் வஞ்சத்தில் வீழ்ந்தவர், ஆனால் பின்லேடன் சாகும்பொழுது தனியாகத்தான் செத்தார், 1 லட்சம் மக்கள் நடுவே அல்ல,
சதாமும் அப்படி மக்களை திரட்டி நடுவில் இருக்கவில்லை, தனியாகத்தான் போராடினார்.
இன்று இந்தியா துரோகம் செய்துவிட்டது என சொல்லி வங்க கடலுக்கு ஒரு கூட்டம் மெழுகு கொளுத்த செல்லும்.
அவர்களுக்கெல்லாம் 1957,1983,1987 என நடந்த மகா கலவரங்களும், அவற்றில் செத்த ஈழமக்கள் எல்லாம் கணக்கில் வரமாட்டார்கள்.
அமைதிபடையாக சென்று செத்த 1500 இந்திய வீரர்கள் நினைவுக்கு வரமாட்டார்கள், ராஜிவோடு செத்த 15 தமிழர்களும், பத்மநாபாவோடு சென்னையில் செத்தவர்களும், அந்த தமிழ் காவலதுறையினரும் நினைவுக்கு வரமாட்டார்கள்.
மே 17ல் முள்ளிவாய்க்காலுக்கு மெழுகு பிடிப்பதும், நவம்பர் 26ல் பிரபாகரனுக்காக செத்தவர்களுக்கு மட்டும் கொடிபிடிப்பதும் ஈழ உணர்வு அல்ல. அது இந்திய தேசியத்திற்கு எதிராக தமிழர்களை பிரிக்கும் ஒரு முயற்சியே.
இங்கே சீமான் என்றொருவரிடம் பாண்டே ஒரு கேள்வி எழுப்பினார், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்த டெல்லிக்கு கோரிக்கை விடுக்கின்றாரே என்றவுடன் சீமான் சீறினார்,"யார் இந்த விக்னேஸ்வரன் இவ்வளவு நாள் எங்கிருந்தார்? இதை ஏற்றுகொள்ளமுடியாது?
அட பரிதாபமே, அம்மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கபட்ட ஒரு முதல்வர் சொல்வதை இவர் ஏற்கமாட்டாராம், இவருக்கு இந்த உரிமையினை யார் கொடுத்தது, இன்னொன்று இன்று வாய்கிழிய பேசும் இவர் முன்பு என்ன செய்துகொண்டிருந்தார்? என்பது பெரும் கேள்வி, ஆனால் பாண்டே கேட்கவில்லை, அது ஊடக தந்திரம், விடுங்கள்.
1986ல் ஆப்கனில் உலக இஸ்லாமியரே வாருங்கள் என அழைத்ததும், பின் இன்றும் ஆப்கன் சீரழிந்து நாசமாய் கிடப்பதற்கும், அதே காலங்களில் உலக தமிழரே ஈழத்தில் கூடுங்கள் என அழைத்து ஈழத்தை நாசபடுத்தியதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.
இன்னும் யாரும் தமிழகத்தில் அப்படி சொல்லிகொண்டிருப்பான் என்றால் கொழுத்த வேண்டியது மெழுகுவர்த்திகளை அல்ல.
vallioor achampadu

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!