ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் [மொட்டு] இணைந்து போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினை [கை ] சேர்ந்த 13 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமது கூட்டணியில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்க வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில வேட்பாளர்கள் பிரசாரங்களை மேற்கொண்ட போதிலும் அந்த கூட்டணியில் போட்டியிட்ட சுதந்திரக் கட்சியின் 13 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.
இவர்கள் பொலநறுவை மற்றும் பதுளை மாவட்டங்களில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று முதல் இடத்தை பிடித்தனர்.
அதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட்டு ஒரு தொகுதியை கைப்பற்றியதுடன் அங்கஜன் ராமநாதன் வெற்றி பெற்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிஏனைய உறுப்பினர்களாக மைத்திரிபால சிறிசேன – பொலன்நறுவை. துமிந்த திஸாநாயக்க – அனுராதபுரம். மகிந்த அமரவீர – அம்பாந்தோட்டை, லசந்த அழகியவண்ண – கம்பஹா, நிமல் சிறிபால டி சில்வா – பதுளை ,சாமர சம்பத் – பதுளை தயாசிறி ஜயசேகர – குருநாகல்,சாந்த பண்டார – குருநாகல் ஷான் விஜேலால் – காலி ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய – கேகாலை சாரதி துஷ்மான – கேகாலை ஜகத் புஷ்பகுமார – மொனராகலை காதர் மஸ்தான் – வன்னி ஆகியோர் உள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!