news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மோட்டார் சைக்கிளில் வருவோரை பொலிஸார் என நினைத்து கடலில் இறங்கிய இளைஞர் மாயம்!

05 May, 2020
    கிண்ணியா பொலிஸ் பிரிவு , பகுதியில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த போது அந்த வழியால் இருவர் மோட்டர் சைக்கிளில் வுவதனை அவதானித் நபர், அவர்களைப் பொலிஸார் என நினைத்து தப்பிப்பதற்காக கடலில் இறங்கிய இளைஞர் ஒருவரைக் காணவில்லை என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (05) காலை கிண்ணியா சோலை வெட்டுவான் எனும் இடத்தில் இடம் பெற்றுள்ளது. கிண்ணியா -03 மதீனா நகரைச் சேர்ந்த இளைஞரே காணாமல் போனவராவர். குறித்த இளைஞர் மணல் ஏற்றிக் கொண்டிருந்த போது அந்த வழியால் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இதன்போதே அவர்கள் இருவரையும் பொலிஸார் என நினைத்து மறு கரைக்குச் செல்வதற்காக கடலில் இறங்கியுள்ளார். இதனையடுத்தே அவர் காணாமல் போயுள்ளார். இச்சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் செய்தி பதிவேற்றும் நேரம்வரை குறித்த இளைஞர் கண்டுபிடிக்கப்படவில்லை.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!