news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மோட்டார் சைக்கிள் – கொள்கலன் பாரவூர்தி விபத்து -13 வயது சிறுமி பலி !

05 Jan, 2024
நீர்கொழும்பு கட்டுவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மீது கொள்கலன் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் 13 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 13 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுமியின் தாயும் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு (4) ஹலவத்தையிலிருந்து கொழும்பு நோக்கி கொள்கலன் பாரவூர்தியும் மோட்டார் சைக்கிளுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. பாரவூர்தியில் சாரதி கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!