news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மோட்டார் சைக்கிள் – டிப்பர் விபத்து : ஒருவர் பலி !

13 Mar, 2024
A9 வீதியின் கிளிநொச்சி – அறிவியல் நகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று(12) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்துடன், எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் கிளிநொச்சி – பொன்னகரைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!