news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மோட்டார் சைக்கிள் - துவிச்சக்கர வண்டி மோதி விபத்து; இளைஞன் பலி; மூவர் காயம்

23 Aug, 2024
புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியில் பெல்வத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து, புத்தல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 23 வயதுடைய இளைஞரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, துவிச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் புத்தல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!