மோட்டார் சைக்கிள் ரயிலில் மோதி விபத்து ; தாய் ஒருவரும் இரண்டு சிறுவர்களும் பலி!
ஆராச்சிக்கட்டுவ மஹய்யாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலில் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
ஆரச்சிக்கட்டுவ மற்றும் ஆனவிழுந்தாவ உப புகையிரத நிலையங்களுக்கு இடையிலான மஹய்யாவ குறுக்கு வழியில் புத்தளம் நோக்கி பயணித்த ரயிலில் மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் ஒருவரும் இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!