மோட்டார் சைக்கிள் விபத்து – 8 வயது சிறுமி பலி !
அநுராதபுரம் – கலென்பிந்துனுவெவ பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் எட்டு வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமி, கலென்பிந்துனுவெவ – வலனேகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுமி, தமது தாய் மற்றும் சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!