news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழிலில் இரு வேறு விபத்துகள்!

22 Mar, 2023
யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளிளோடு மோதுவதை தவிர்ப்பதற்காக எதிர் திசையில் திடீரென திருப்பிய பொழுது முன்னால் வந்த கப்ரக வாகனத்தோடு பலமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கப்வாகனம் முற்றாகச் செய்தமடைந்தது. இவ் விபத்தை அடுத்து டிப்பர் சாரதி டிப்பர் வாகனத்தை கைவிட்டு தப்பி சென்றுள்ளார். விபத்தில் கப் சாரதிக்கு தெய்வாதீனமாக எந்த காயங்களும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு குடத்தனைச் சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இந்த விபத்தில் ஒரு பெண் படுகாயம் அடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அம்மன் பகுதியில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பார ஊர்தியும், பருத்தித்துறை பகுதியிலிருந்து மருதங்கேணி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. இதில் மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பலியானவர் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியை சேர்ந்த சின்னையா கணேசன் சிங்கம் (44) என தெரிவிக்கப்படுகிறது. அவரோடு கூட வந்த பெண் பிள்ளை (மகள்) தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாரதி கைது செய்யப்பட்டதுடன் விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகிறானர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!