news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் அச்சுறுத்தி தங்க நகைகள் கொள்ளை

21 Jul, 2020
  யாழ்ப்பாணம் , மூளாய் பகுதியிலுள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்தி தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 1.45 அளவில் இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, சுமார் 16 1/2 பவுன் தங்கம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாள் மற்றும் கோடரிகளுடன் வீட்டினுள் நுழைந்த 06 பேர், வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்தி கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!