யாழில் அதிக வெப்பத்தால் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
அதிக வெப்பம் காரணமாக யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் புதன்கிழமை (08) குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது 45) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் புதன்கிழமை (08) மதியம் 1.45 மணியளவில் மதுபோதையிலிருந்ததை அவரது மகள் அவதானித்துள்ளார்.
பின்னர் 3.30 மணியளவில் அவர் வெயிலில், கீழே விழுந்து இருந்ததை அவதானித்துள்ளார். அருகில் சென்று பார்த்தவேளை அவர் உயிரிழந்து காணப்பட்டார்.
அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அவர் அதிக வெப்பம் காரணமாக உடலில் பத்துக்கு மேற்பட்ட எரிகாயங்கள் ஏற்பட்டு உயிரிழந்ததாகப் பிரேதப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சடலம் வியாழக்கிழமை (9) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!