news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம

12 Jun, 2022
யாழ்ப்பாணம், உரும்பிராய் சந்தியில் 11 ஆம் திகதி சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளும் - பேருந்தும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து புன்னாலைக்கட்டுவன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து கோப்பாய் - மானிப்பாய் வீதியில் உரும்பிராய் சந்தியில் சடுதியாக வீதியை கடக்க முயற்சித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!