news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் இருந்து சென்ற ரயிலில்  மோதி ஒருவர் உயிரிழப்பு!

29 Sep, 2020
யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான நபரின் சடலம் அடையாளம் காண முடியாத அளவு உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!