யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் - மயிலங்காடு பகுதியில் தோட்டக்கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலம் நேற்று திங்கட்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளது.
மயிலங்காடு, எழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
உயிரிழந்தவர் கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றிருந்தார்.
இந்நிலையில் இரண்டு தினங்களாக அவரை காணாத உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்டு வந்தனர்.
இவ்வாறான சூழ்நிலையில் அவரது சடலம் நேற்று தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
அவர் மது போதையில் கிணற்று கட்டினில் உறங்கிய வேளை அவர் கிணற்றினுள் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!