news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் உறவினர் வீட்டில் தாலிக்கொடியை திருடி பொலிஸாரிடம் பிடிபட்ட பெண்

05 Sep, 2023
யாழ்ப்பாணத்தில் உறவினரின் வீட்டுக்குச் சென்று, அவ்வீட்டில் இருந்த தாலிக்கொடியை திருடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அப்பெண்ணை பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. யாழ்ப்பாணம், சித்தன்கேணி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேசை மீது வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடியை காணவில்லை என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அந்த முறைப்பாட்டின்படி, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதேவேளை, தாலிக்கொடி காணாமல்போன தினத்தில் குறித்த வீட்டுக்கு வந்து சென்ற உறவினரான பெண் ஒருவர் மீது வீட்டில் வசிப்பவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து, குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரித்தபோது, அவர் தாலிக்கொடியை திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார். அத்தோடு, அந்த தாலிக்கொடியை அடகு நிறுவனம் ஒன்றில் 2 இலட்ச ரூபாய்க்கு அடகு வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அடகு வைக்கப்பட்ட நகையை மீட்ட பொலிஸார், நகையுடன் பெண்ணை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) முற்படுத்தியுள்ளனர். அவ்வேளை, இவ்வழக்கை விசாரித்த நீதவான், பெண்ணை கடுமையாக எச்சரித்து, பிணையில் செல்ல அனுமதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!